அதிரை இமாம் ஷாபி மாணவர்களிடம் உரையாடிய புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி (படங்கள் இணைப்பு)

அதிரை இமாம் ஷாபி பள்ளியில் இன்று மாணவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் எம்.எஸ்.தாஜுத்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வீடியோ காண்பரன்சிங் மூலமாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான கிரண் பேடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு கிரண் பேடியிடம் கேள்வி கேட்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் கேள்விக்கு அவர் ஒவ்வொன்றாக விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், அதிரை FM நிர்வாகிகள், ஊகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Close