Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

இந்திய பள்ளிகளிலேயே முதன்முறையாக FM சேவையை துவங்கிய அதிரை இமாம் ஷாபி பள்ளி (படங்கள் இணைப்பு)

எதிர்வரும், 18-12-2016 அன்று அதிரை FM எனப்படும், பண்பலை வாணொளி சேவை துவக்க விழா நிகழ்ச்சி இமாம் ஷாபி பள்ளியில் மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. 90.4  என்ற அலைவரிசையின் மூலமாக இயங்க இருக்கும் இந்த வாணொளி சேவையின் மூலமாக கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், கடல்வளம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு, அரசு அறிவிப்புகள் ஆகியற்றை அறிந்துக்கொள்ளலாம். இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்தினரால் துவங்கப்படும் இந்த வாணொளி சேவை மூலம் சமூக முன்னேற்றத்திற்கு பயணளிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் தினசரி 7 மணி நேரம் நடைபெறவுள்ளது. இதன் மூலமாக இந்திய பள்ளிகளிலேயே முதன்முறையாக FM சேவையை துவங்கும் பள்ளி என்ற பெருமையை இமாம் ஷாபி பள்ளி பெறுகிறது.

இது குறித்து அதிரையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அதிரை FM நிர்வாகிகள், இமாம் ஷாபி பள்ளி ஆசிரியர்கள்,  அதிரை பிறை, அதிரை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வலைதளங்களை சேர்ந்த நிருபர்களும், செய்தித்தாள் பத்திரிக்கையாளர்களும் கலந்துகொண்டனர். அப்போது இந்த வாணொளி மூலமாக நமதூரில் ஊடகத்துறையின் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுமா? என்று நமது அதிரை பிறை செய்தியாளர் இஜாஸ் அகமது கேட்டகேள்விக்கு பதிலளித்த நிகழ்ச்சி தயாரிப்பு குழு தலைவர் பேரா.செய்யது அகமது கபீர், திறமையுள்ள ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு நிச்சயம் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றார்.

இந்த வாணொளி சேவை அதிரையை சுற்றியுள்ள பட்டுக்கோட்டை, மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர் உள்ளிட்ட 10 கிலோ மீட்டருக்கு உட்பட்ட 40 க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த வாணொளி சேவையை கேட்டு மகிழலாம் என நிர்வாகத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.wp-1481895761618.jpg15554637_926207497515970_129706226_n 15570878_926207534182633_243979283_n 15570885_926207590849294_1815515623_n-1 15577797_926207604182626_1001221897_n