Adirai pirai
FLASH NEWS posts உள்ளூர் செய்திகள்

அதிரையில் உதயமாகிறது 90.4 FM (வானொலி நிலையம்)!

அதிரையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (18.12.2016) தேதி புதிய வானொலி நிலையம் இமாம் ஷாபி (ரஹ்) பள்ளி வளாகத்தில் மாலை 5 மணியளவில் உதயமாகிறது. இதன் துவக்க விழா நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கலந்துகொண்டு இதனை துவங்கி வைக்கிறார். 90.4  என்ற அலைவரிசையின் மூலமாக இயங்க இருக்கும் இந்த வாணொளி சேவையின் மூலமாக கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், கடல்வளம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு, அரசு அறிவிப்புகள் ஆகியற்றை அறிந்துக்கொள்ளலாம். இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்தினரால் துவங்கப்படும் இந்த வாணொளி சேவை மூலம் சமூக முன்னேற்றத்திற்கு பயணளிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் தினசரி 7 மணி நேரம் நடைபெறவுள்ளது.

இந்த வாணொளி சேவை அதிரையை சுற்றியுள்ள பட்டுக்கோட்டை, மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர் உள்ளிட்ட 10 கிலோ மீட்டருக்கு உட்பட்ட 40 க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த வாணொளி சேவையை கேட்டு மகிழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy