வாகன ஓட்டிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!

புதுடெல்லி,கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வள நாடுகள்‌ முடிவு செய்துள்ளதை அடுத்து அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஓராண்டில் இல்லாத அளவு உயர்ந்து 58 டாலரைத் தொட்டுள்ளது. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிவுப்பாதையிலேயே உள்ளது.

இதனிடையே, இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மற்றும் மாத இறுதி நாளில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.21 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79 காசுகளும் உயர்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

Close