அதிரை இமாம் ஷாபி மாணவர்கள் சுற்றுசூழலை வழியுறுத்தி அமைதிப் பேரணி (படங்கள் இணைப்பு)

அதிரையில் இன்று காலை 10:30 மணியளவில் இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள்  சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் அமைதி பேரனி சென்றனர்.அதிரை இமாம் ஷாபி பள்ளியில் இருந்து மெயின் ரோடு வழியாக அதிரை பேருந்து நிலையம் வரை சுமார் 500க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த அமைதிப் பேரணியில் கலந்துக்கொண்டனர்.இதில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் மாணவர்கள் “மன் வளம் காப்போம், மரம் வளர்ப்போம், மழை நீர் சேமிப்போம், ப்லாஸ்டிக்கை ஒழிப்போம்” போன்ற பதாகைகளை கையில் ஏந்தியவாரு சாலையில் நடந்து சென்றனர்.இதில் அதிரை காவல்துரையினர், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.


Close