அதிரையில் விபத்துக்குள்ளான வாலிபரின் மருத்துவ உதவிக்கு சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக நிதியுதவி

அதிரையை சேர்ந்த வஜீர் சுல்தானின் மகனானர் முஹம்மது சாபி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சாலை விபத்தில் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவருக்கு காலில் இரு இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்க்கு போதிய பொருளாதார வசதி இல்லாத குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பொருளாதார உதவி தேவைப்பட்டது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் இவருக்கு நிதியுதவியை வழங்கினர். இந்த நிலையில் அதிரை சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பின் சார்பாக திரட்டப்பட்ட 67,300 ரூபாயை அதன் தலைவர் அகமது அனஸ், செயலாளர் முஹம்மது சலீம், துணைத்தலைவர் இத்ரிஸ் அகமது மற்றும் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அஹமது கபீர் ஆகியோர் தஞ்சையில் மருத்துவமனைக்கு நேரில் சென்று இளைஞரின் குடும்பத்தார்களின் வழங்கி நலன் விசாரித்தனர்.

அதிரையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக வேகத்துடன் செல்வதால் விபத்துகள் ஏற்படுவது குறித்து சமூக ஆர்வலர்களின் கருத்துக்களை காண்போம்…

Close