உதயமானது Adirai FM 90.4!

​அதிரை FM எனப்படும், பண்பலை வானொலி சேவை துவக்க விழா நிகழ்ச்சி இமாம் ஷாபி பள்ளியில் இன்று (18.12.16) மாலை 3:30 மணியளவில் நடைபெற்றது. 

இதில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு.அண்ணாத்துரை தலைமை வகித்தார். தாசில்தார் வட்டாச்சியர், பள்ளியின் தாளாளர் ஜனாப்.M.S.தாஜுதீன் அவர்கள், பள்ளி நிர்வாகிகள், ஊர் முக்கியஷ்த்தர்கள் உடன் இருந்தனர்.

90.4  என்ற அலைவரிசையின் மூலமாக இயங்க இருக்கும் இந்த வானொலி சேவையின் மூலமாக கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், கடல்வளம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு, அரசு அறிவிப்புகள் ஆகியற்றை அறிந்துக்கொள்ளலாம். இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்தினரால் துவங்கப்படும் இந்த வானொலி சேவை மூலம் சமூக முன்னேற்றத்திற்கு பயணளிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் தினசரி 7 மணி நேரம் நடைபெறவுள்ளது. இதன் மூலமாக இந்தியாவிலேயே முதன்முறையாக FM சேவையை துவங்கிய பள்ளி என்ற பெருமையை இமாம் ஷாபி பள்ளி பெறுகிறது.
இந்த வாணொளி சேவை அதிரையை சுற்றியுள்ள பட்டுக்கோட்டை, மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர் உள்ளிட்ட 10 கிலோ மீட்டருக்கு உட்பட்ட 40 க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த வாணொளி சேவையை கேட்டு மகிழலாம் என நிர்வாகத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Close