துருக்கியில் ரஷிய தூதர் சுட்டுக்கொலை! பதைபதைக்க வைக்கும் நேரடி வீடியோ காட்சி

துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள கலைக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லோஃப் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது துருக்கி போலீசார் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆண்ட்ரே கார்லோஃப் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது. ஆண்ட்ரே கார்லோஃப் உரையாற்ற தொடங்கிய போது, சிரியா மற்றும் அலெப்போ நகர் குறித்த வாசகத்துடன் கோஷமிட்டவாறு துப்பாக்கி ஏந்திய காவலர் துப்பாக்கியால் சுட்டு உள்ளார். இத்தாக்குதலில் பலர் காயம் அடைந்து உள்ளனர்.
தாக்குதல் நடைபெற்ற கலைக்கூடத்தில் பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Close