உமர் (ரலி) போன்று ஆட்சி செய்வேன் என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால்!

கலீபா உமர் அவர்களின் ஆட்சியை டெல்லியில் அமல்படுத்துவேன் : கேஜ்ரிவால் சூளுரைகலீஃபா ‘உமர்’ அவர்களின் ஆட்சியை இந்தியாவில் கொண்டு வர ஆசைப்படுகிறேன் என்ற ஆவலை வெளிப்படுத்திய ‘மகாத்மா காந்தி’யை தொடர்ந்து, உமரின் ஆட்சிமுறையை டெல்லியில் கொண்டுவர முயற்சிப்பேன் என்று முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் சூளுரைத்துள்ளார்.’இஸ்லாமிக் கல்சுரல் அண்ட் நோபிள் எஜுகேஷன் சொசைட்டி’ சார்பில், டெல்லியில் நேற்று நடத்தப்பட்ட ‘பர்சனாலிட்டி டெவலப்மென்ட் புரோகிராம்’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால் இவ்வாறு கூறியுள்ளார்.நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததில் பெருமைப்படுகிறேன், எனது பணிச்சுமையின் காரணமாக ஒருவேளை நான் இங்கு வராமல் போயிருக்குமானால் மிகப்பெரிய இழப்பை சந்தித்திருப்பேன் என்றார்.‘சுயமுன்னேற்ற பயிலரங்குகள்’ பலவற்றில் தான் கலந்துக் கொண்டுள்ள போதிலும், இஸ்லாமிய வாழ்வியல் நெறிகளை அடிப்படையாக கொண்ட இதுபோன்றதொரு உன்னத பயிற்சியை நான் வேறு எங்கும் கண்டதில்லை என்றார் முதலமைச்சர் கேஜ்ரிவால்.இங்கு சொல்லப்பட்ட சுய ஒழுக்க நெறிகளை, என் வாழ்நாளில் வேறு எங்கும் கேட்டதில்லை என்ற கேஜ்ரிவால், நீங்கள் நடத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை டெல்லி அரசின் சார்பில் பரவலாக நடத்தப்படும் என்றார்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close