அதிரை இலியாஸ் தலைமையில் நடைபெற்ற SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் (படங்கள் இணைப்பு)

SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் (20.12.2016) அதிராம்பட்டினத்தில் மாவட்ட தலைவர் Z.முஹம்மது_இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. 

வரவேற்புரையினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.அப்துல்_ரஹ்மான் நிகழ்த்தினார். மாவட்ட பொதுச்செயலாளர் J.ஹாஜி ஷேக் துவக்கவுரை நிகழ்த்தினார்.

தீர்மாணங்கள்:

1. இதில் “மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை” விளக்க தெருமுனை கூட்டம் மாவட்டம் முழுவதும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

2. தேசிய செயற்குழுவின் முடிவின் அடிபடையில் ஜனவரி 2017 மாதம் முழுவதும் கட்சியின் வளர்ச்சி நிதி திரட்டுவதற்காக திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து நகரத்திற்கும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புதாரியாக நியமிக்கபட்டனர். மற்றும் மாவட்டம் சார்ந்து பல தரப்பட்ட நிகழ்வுகள் கலந்தாய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் மதுக்கூர் நகர தலைவர் S.J.சாகுல் ஹமீது நகர செயற்குழு உறுப்பினர் T.J.மாப்பிள்ளை தம்பி, மல்லிப்பட்டினம் தலைவர் ஜெய்லானி, அதிரை, சத்திரம், புதுப்பட்டினம் மற்றும் பட்டுக்கோட்டை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் இறுதியாக நன்றியுரையை SDTU மாவட்ட தலைவர் அமாலுல்லா நிகழ்த்தினார்.

Close