கீழக்கரையில் வங்கி வாசலில் நின்ற சித்திக் அலி என்ற முதியவர் மரணம்!

நாடுமுழுவதும் கடுமையான பணத்தட்டுப்பாடு காரணமாக ஏடிஎம் மற்றும் வங்கிகள் வாசல்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கால்கடுக்க காத்திருந்து பணம் பெற்று வருகின்றனர். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அவசரகெதி மத்திய அரசு அறிவித்த இந்த முடிவால் மோடி மீது கடுமையான அதிர்ப்தியிலும், கோபத்திலும் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியான நவம்பர் 8 ஆம் தேதியில் இருந்து இதுவரை நாடு முழுவதும் அதிர்ச்சியின் காரணமாகவும், உணவின்றியும், வங்கிகள் வாசலிலும் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இந்த உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டே உள்ளன. இந்த நிலையில்

கீழக்கரையில் இன்று காலை கீழக்கரையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணமெடுக்க நின்ற சித்திக் அலி என்ற முதியவர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Close