விரைவில் பேஸ்புக்கில் லைவ் ஆடியோ!

சமூக வலைதளமான ஃபேஸ்புக் அடுத்த ஆண்டு ஆடியோ லைவ் ஸ்ட்ரிமிங் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. சமூக வலைதளமான ஃபேஸ்புக் கடந்த ஏப்ரல்
மாதம் வீடியோ லைவ் ஸ்ட்ரிமிங் அறிமுகம் செய்தது. இது இன்றைய இளைஞர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இளைஞர்கள் மட்டுமின்றி
மீடியாக்களுக்கும் இதை பயன்படுத்துகின்றன. மேலும் பிரபலங்களும் தங்கள் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடும் ஓர் களமாக இதை பயன்படுத்தி
வருகின்றனர்.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் ஆடியோ லைவ் ஸ்ட்ரிமிங் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. ஃபேஸ்புக்கின் இந்த வசதி தற்போது சோதனை நிலையில்
உள்ளது. ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் இந்த வசதியின் மூலம் ரேடியோ பாணியில் தங்களது நண்பர்களுக்கு மத்தியில் நேரலையில் பேச முடியும்.

“ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்களில் சிலர் வீடியோ அல்லாமல் ஆடியோ மூலமாக நேரலையில் பேச விரும்புகின்றனர் என்பது எங்களுக்குத் தெரிகிறது.
அவர்களுக்காகவே இந்த வசதியை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம்.” என்று ஃபேஸ்புக்கின் மென்பொருள் பொறியாளர் பாவனா ராதாகிருஷ்ணன் தனது
பிளாகில் பதிவிட்டுள்ளார்.

ஒருவர் ஒலிபரப்பும் நேரலையை மற்றவர் கேட்பது மட்டும் இன்றி அதற்கு கமெண்ட்டுகள் பண்ணவும், ரியாக்ட் பண்ணவும் முடியும்.

Close