ஹாங்காங் செல்வதற்கான இலவச விசா ரத்து! 

சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றான ஹாங்காங் முன்பு இங்கிலாந்து கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியாக உள்ளது.
இங்கு இந்தியர்கள் ‘விசா’ எதுவும் இன்றி அதாவது இலவச ‘விசா’வில் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி செல்லத்தக்க பாஸ்போர்ட்டுடன் ஹாங்காங் செல்லும் இந்தியர் அங்கு ‘விசா’ இன்றி 14 நாட்கள் தங்க முடியும்.

ஆனால் இச்சலுகை திடீரென ரத்து செய்யப்பட்டது. இனி ஹாங்காங் செல்லும் இந்தியர்கள் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பித்து ‘விசா’ பெற வேண்டும். அதன் பிறகுதான் விமானம் மூலம் நேரடியாக ஹாங்காங் செல்ல முடியும்.

இந்த நடைமுறை வருகிற ஜனவரி 23-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதற்குரிய முன் அனுமதி பதிவு செய்ய ஆன்லைன் சேவை இப்போதே தொடங்கப்பட்டுவிட்டது.

இந்தியாவில் இருந்து ஹாங்காங் வந்து அங்கு தங்க அடைக்கலம் கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

இத்தகைய அதிரடி நடவடிக்கையால் ஹாங்காங்குக்கு வர்த்தகம் செய்ய மற்றும் விடுமுறை கழிக்க சென்று வரும் 5 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Close