பட்டுக்கோட்டை பகுதிகளில் நகை, பணம் திருடியவர் கைது!

திருவாரூர் மாவட்டம், வாழவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி சக்கரை (எ) சக்கரவர்த்தி (24). செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டையில் நகைகளை விற்க வந்த இவரை பட்டுக்கோட்டை போலீஸார் சந்தேகத்தின்பேரில் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் சர்க்கரவர்த்தி கடந்த ஜூலை மாதம் பட்டுக்கோட்டை அடுத்த ஆலத்தூர் வீதியில் நடந்து சென்ற முருகன் மனைவி பொற்கொடியிடம் 3 பவுன் சங்கிலி, கடந்த அக்டோபர் மாதம் அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி ஜோதியிடம் (55) எட்டரை பவுன் சங்கிலி, கடந்த ஜூலை மாதம் திருச்சிற்றம்பலத்தில் ஷேக்அப்துல்லா என்பவரின் எலெக்ட்ரிக்கல் கடையில் ரூ. 25 ஆயிரம் ரொக்கம், ஒட்டங்காட்டில் நவாஸ்கான் மளிகைக் கடையில் ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் பதினொன்றரை பவுன் நகைகளை மீட்டனர்.

Close