அதிரையில் குப்பை பிரச்சனைக்கு குட் ஐடியா! (படங்கள் இணைப்பு)

அதிரையில் தொடர் பிரச்சனையாக இருந்து வந்த குப்பைகளுக்கான சிக்கல் இன்னும் குறையாமல் இருந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது பேரூராட்சித் தலைவரே இல்லாமல் நமதூர் செயல்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பல பகுதிகளில் குப்பை கூழங்கல் அள்ளப்படாமல், மிகப்பெரிய சுகாதாரா சீர்கேடாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இதற்க்கு ஒரு தீர்வு காணும் விதமாக முதல் கட்டமாக, அதிரை 13வது வார்டு வாய்க்கால் தெரு நுழைவு பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை குறைக்க அதிரை முன்னாள் பேரூராட்சித்தலைவர் அஸ்லம் அவர்களால் குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு குப்பைகள் உள்ள பகுதிகளில் அந்தந்த தெருக்களை சேர்ந்த தன்னார்வலர்கள் குப்பை கொட்டும் பகுதியில் பயனுள்ள வகையில் ஏதாவது ஒன்றை அமைத்தால், குப்பை பிரச்சனை குறைய வாய்ப்புகள் உள்ளது.

Close