அதிரையில் நடைபெறும் 3ஆம் ஆண்டு மாபெரும் “இளம் இஸ்லாமியன்” போட்டி!

எதிர்வரும் ஜனவரி மாதம் 14ம் தேதி இஸ்லாமிய மாணவர்களுக்காக “இளம் இஸ்லாமியன்” என்னும் மார்க்க அறிவு போட்டி அதிரையில் சமுக, சமுதாய அக்கரைக் கொண்ட இளைஞர்களின் முயற்சியில் இன்ஷா அல்லாஹ் நடைப்பெற உள்ளது. இப்போட்டியில் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை பங்கு பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நோக்கம்:

1.தற்பொழுது நமதூர் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் உலக கல்வியின் மீது ஆர்வமாக உள்ளனர்.

2.மேலும் பல மாணவர்கள் இஸ்லாமிய சட்ட திட்டங்களையும் வரலாறுகளையும் அறியாதவர்களாக உள்ளனர்.

3.எனவே நமதூர் மாணவர்களிடம் மார்க்க கல்வி மற்றும் மார்க்க சட்ட திட்டங்கள், இஸ்லாமிய வரலாறுகளை அறிய ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த போட்டியை நடத்த உள்ளோம்.

4.மேலும் எதிர்வரும் அரையாண்டு விடுமுறைகளை மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.

விதிமுறைகள்:

1.100 மதிப்பெண்கள் கொண்ட போட்டியான இது எழுத்து முறையில் மாணவர்களுக்கு மட்டும் நடைபெறும்.

2. இந்த தேர்வில் இடம்பெறும் வினாக்கள் இளம் இஸ்லாமியன் கேள்வி-பதில் புத்தகத்தில் இருந்து மட்டுமே கேட்கப்படும்.

விபரங்கள்:

1.போட்டி நடைப்பெறும் இடம்: ஏ.எல்.மெட்ரிகுலேசன்

பள்ளி (வி.கே.எம்.ஸ்டோர் எதிரில்) (சி.எம்.பி.லேன், அதிராம்பட்டினம்)

நாள்: ஜனவரி 14 2015

(புதன் கிழமை) நேரம்: காலை

9:00 மணி முதல் 12:00 மணி வரை.

2.முன்பதிவு: பைத்துல்மால் வளாகம், நடுத்தெரு, அதிராம்பட்டினம்.

நாள்: 27,28-12-2016 நேரம்: காலை 9:00-12:30

இப்படிக்கு: இளம் இஸ்லாமியன் கமிட்டி

தொடர்புக்கு: 9944084992, 7200364700, 7200563300

Close