அதிரையில் சூடு பிடித்திருக்கும் மாம்பழ விற்பனை

அதிரையில் தற்பொழுது மாம்பழம் விற்பனை
சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. வருடா வருடம் மே மாத இறுதியில் தமிழகத்தில் மாம்பழ
சீசன் வருகிறது. அனேகமான பொதுமக்களின் பிரியமான பழமாக மாம்பழம் திகழ்கின்றது.
அதிரையில் கடைத்தெரு, பஸ் ஸ்டாண்டு ஆகிய பகுதிகளில் பரபரப்பாக மாம்பழம்
விற்பனையாகி வருகிறது. இந்த பகுதிகளில் வந்து செல்லும் பொதுமக்கள் பலரும்
மாம்பழங்களை அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இது குறித்து கடைத்தெருவில் மாம்பழம் விற்பனை செய்து
வரும் குமார் அவர்கள் கூறியதாவது…”வருடா வருடம் மாம்பழங்கள் ஜூன் மாதத்தில்
அதிகம் காய்க்கின்றன. மதுக்கூர், பள்ளிக்கொண்டான், பேராவூரனி, தொக்காளிக்காடு ஆகிய
ஊர்களில் காய்க்கும் பல வகையான மாம்பழங்களை வாங்கி வந்து இங்கு விற்பனை
செய்கிறோம். இப்பகுதிகள் பழுக்கும் மாம்பழங்கள் அதிக சுவையுடன் உள்ளது. மக்கள்
விரும்பி வாங்கி செல்கின்றனர். ஜூலை மாதம் பாதி வரை மாம்பழம் அதிகம் காய்க்கும்
என்றார்”
எடிட்டர் கருத்து….
மாம்பழங்களில் பல வகைகள் உண்டு அவை பின்வருமாறு
·        
செம்பாட்டான்
·        
சேலம்
·        
பாண்டி
·        
களைகட்டி
·        
பச்சதின்னி
·        
கொடி மா
·        
மத்தள காய்ச்சி…..தேமா (இனிப்பு மிக்கது) 
·        
புளிமா (புளிப்பு மிக்கது)
·        
கறுத்த கொழும்பான்
·        
வெள்ளைக் கொழும்பான்
·        
பங்கனப்பள்ளி
·        
மல்கோவா
·        
ருமானி
·        
திருகுணி
·        
விலாட்டு
·  அம்பலவி    ஆகும்.
இதில் மல்கோவா மற்றும் சேலம் மாம்பழங்கள் மக்களால்
அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிறது.
மாம்பழத்தின் பலன்கள்:
மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் பொருத்து பழச்சதை மிருதுவாகவோ, கூழாகவோ, உறுதியாகவோ இருக்கும்.
மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலும், கொப்புளங்களும் உண்டாக்கலாம். மாம்பாலில் இருக்கும் அமிலப்பொருட்களே இதற்கு காரணமாகும். இந்திய மக்கள் மாம்பழம் உண்பதால் வயிற்றுத் தொல்லைகள் சரியாகும், இரத்த இழப்பு நிற்கும், இதய நலம் உண்டாகும் என நம்புகின்றனர்.
இந்திய துணி வகைகளில் மாம்பழ வடிவம் அழகுக்காகப் பயன் படுத்தப்படுகிறது.
 
Close