அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற மாணவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் (படங்களுடன்…)

அதிரையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான “அடுத்தது என்ன?” என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வரும் 28-12-2016 அன்று காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் அடுத்தது என்ன படிக்கலாம்? கல்வி உதவி தொகைகள் பெறுவது எப்படி? நுழைவுத்தேர்வு என்ன? என்பது போன்ற மாணவர்களின் பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஆலிம் முஹம்மது சாலிஹ் கல்லூரியின் பேராசிரியரும், மாணவர்கள் நல ஆர்வலருமான பேரா.முஹம்மது ரபீக், மொழிப்பிரியன் அப்துல் ஹமீது, குழந்தை பேச்சாளர்.மஹ்மூத் அக்ரம், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்.செய்யது அகமது கபீர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளனர்.

இந்த நிலையில் இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சி குறித்து விளக்கமளிக்கும் வகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் பேராசிரியர்.அப்துல் காதர், பேராசிரியர்.ஹாஜா, தீனியாத் ஆசிரியர் நஜ்முத்தீன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சி குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். இதில் SISYA தலைவர் அஹமது அனஸ், செயலாளர்.முகமது சலீம், துணை தலைவர். இத்ரீஸ் அஹமது ஆகியோர் கலந்துகொண்டனர்

Close