கோடிகளை தந்த அமேரிக்க முஸ்லிமின் தாடி..!

நீங்கள்
படத்தில் பார்க்கும் இஸ்லாமிய சகோதரின் பெயர் அலி அபுபக்கர் அப்துல் கரீம், துனிஸ் வம்சாவழியை சார்ந்த அமெரிக்க முஸ்லிம், நான்கு
குழந்தைகளுக்கு தந்தையான இவர் பல்கலைகழகங்களில் நான்கு டிகிரிகளையும் பெற்றவர்
ஆவார்

இவர் ஒரு
அமெரிக்க நிறுவனத்தில் உயர்ந்த பொறுப்பு ஒன்றில் பணியாற்றி வந்தார். நீண்ட தாடியோடு
அவர் பணிக்கு வந்ததால் அவர் பணி ஒழுங்குகளை மீறியுள்ளார் என கூறி அவர் பணியாற்றிய
நிறுவனம் அவரை 2008 ஆண்டில் பணி நீக்கம் செய்தது, அவர் இதை
எதிர்த்து நீதிமன்றம் சென்றார்.
நீதிமன்றத்தில்
தான் பணி ஒழுங்கை மீறவில்லை எனவும் எனது மத அடையாளத்தை வெளிபடையாக
வெளிபடுத்தியதற்காக தான் பணி நீக்கம் செய்ய பட்டிருப்பதாகவும் இதனால் தமக்கு
மிகுந்த மன உளைச்சலும் பொருள் இழப்பும் ஏற்பட்டிருப்பதாகவும் இதற்க்கு உகந்த நீதியை
வழங்க வேண்டும் என்றும் தனது வழக்கறிஞர் மூலம் தனது வாதத்தை ஆதாரங்களோடு எடுத்து
வைத்தார் 
அவரின் வாதத்தில் இருந்த உண்மையையும் நேர்மையையும் நீதிமன்றம் அறிந்து கொண்டதால் அவருக்கு
அவரை பணி நீக்கம் செய்த நிறுவனம் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று
நீதி மன்றம் உத்தரவிட்டது
12 இலட்சம் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் பலகோடிகளாகும். ஆக தாடி
வளர்ப்பதால் இறைவன் தரும் நண்மை ஒருபக்கம் இருந்தாலும் அலி அபுபக்கர் அப்துல்
கரீம் உறுதியுடன் தாடி வளர்த்து இறுதிவரை போராடியதால் உலகிலேயே அவர் கோடிகளை
பெற்றார்.
Close