ரேஷன் கடைகளில் மின்னணு பணப் பரிமாற்றம். மத்திய அரசு

நாடுமுழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் மின்னணு பணபரிமாற்றத்திற்கு மாற்ற மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அவ்வகையில் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மின்னணு பணப் பரிமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத்திய உணவுத் துறை அமைச்சகத்தின் சாதனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் இவ்வாறு தெரிவித்தார். நாடு முழுவதும் 5 கோடியே 27 லட்சத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் இயங்கி வருவதாகவும். அவற்றில் மின்னனு பணப் பரிமாற்றம் மூலமாக பொருட்கள் வாங்குவதற்கான முதற்கட்டப் பணிகள்; தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்த அவர், வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தப் பணிகளை நிறைவு செய்து நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என உறுதியளித்தார். மேலும் மின்னணுப்பணப் பரிமாற்றத்திற்கு பொது மக்களும், அனைத்து மாநிலங்களும் உதவி புரியவேண்டும் எனவும் அமைச்சர் பஸ்வான் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே நடைபெற்ற பணமில்லாத பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, ஏழை மக்களால் பணமில்லாத பரிமாற்றத்தை மேற்கொள்வது இயலாது என்று மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Close