அதிரையில் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக வினர் அஞ்சலி (படங்கள் இணைப்பு)

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 29 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று அதிமுக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று அதிரையில் நூற்றுக்கணக்கான அதிமுக வினர் பேரணியாக நடந்துசென்று பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் உருவபடத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் நகர செயலாளர் பிச்சை, துணை செயலாளர் அஹமது தமீம், நகர பாசரை செயலாளர் அஹமது தாஹிர் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

Close