அதிரையை எட்டி பார்த்த குட்டி மழை!

அதிரையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் சென்ற வாரம் பலத்த மழை பெய்து வந்தது. இன்று மாலை 6:00 PM மணியளவில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு அதிரையில் குளு குளு காற்று வீசப்பட்டது. இஷா தொழுகைக்கு பிறகு 15 நிமிடம் மழை பெய்தது.
உடனே மழை நின்றதால் அதிரை மக்கள் ஏமாற்றமடைந்துள்ளது. இன்னும் மழையை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Close