Adirai pirai
உள்ளூர் செய்திகள்

ராம்தேவின் பதஞ்சலி பிஸ்கட்டுகளில் புழுக்கள் (அதிர்ச்சியளிக்கும் வீடியோ)

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரங்களில் தவறாக ப்ராண்டிங் செய்த குற்றத்திற்காக, உத்தர்கண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நீதிமன்றம் அந்நிறுவனத்திற்கு 11 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

பதஞ்சலி நிறுவனம் 2006 ஆம் ஆண்டு யோகா குரு ராம்தேவால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மருத்துவம் சார்ந்த பொருட்களை மட்டுமே தயாரித்து வந்த இந்நிறுவனம்,  2014 ஆம் ஆண்டில் இருந்து நூடுல்ஸ், சோப் போன்ற பொருட்களை தயாரிக்க தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஹரித்வாரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, பதஞ்சலி நிறுவன தயாரிப்புகள் சிலவற்றை ருத்ராபூர் ஆய்வகத்தில் சோதனைக்குட்படுத்தியது. அந்த சோதனையில், பதஞ்சலியின் கடுகு எண்ணெய், உப்பு, அன்னாசி ஜாம், கடலை மாவு மற்றும் தேன் உள்ளிட்ட பொருட்கள்  தர சோதனையின் போது தோல்வியடைந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை பதஞ்சலி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது.

நிலுவையில் இருந்த வழக்கு, இன்று ஹரித்வார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில், வேறு நிறுவனத்தின் தயாரிப்புகளை, பதஞ்சலி நிறுவன தயாரிப்புகள் போன்று  சித்தரித்து விளம்பரப்படுத்தியது  தெரிய வந்துள்ளது. உணவு பாதுகாப்பு விதிமுறைளின் 52-53 பிரிவை மீறிய குற்றத்திற்காகவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை (பேக்கேஜிங் மற்றும் பெயரிடல்) கட்டுப்பாட்டின் 23.1 (5) பிரிவை மீறிய குற்றத்திற்காகவும் பதஞ்சலிக்கு  11 லட்சம் அபராதம் விதித்து ஹரித்வார்  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம், சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் பதஞ்சலி பொருட்களின் தரம் பற்றி மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் பதஞ்சலி நிறுவனத்தின் புதிய பிஸ்கட்டுகளில் புழுக்கள் உள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy