மல்லிப்பட்டினத்தில் அமைதி திரும்ப பெற நடைபெற்ற ஆலோசனை கூட்டம் !! மமக பொது செயலாளர் மல்லிப்பட்டினம் வருகை..

கடந்த இரண்டு மாதகாலமாக பதட்டமான நிலையில்
பிரச்சினைகளை சந்தித்துவரும் மல்லிப்பட்டினதிற்க்கு இன்று (2 . 6 . 2014)
இரண்டாவது முறையாக மமக மாநில பொது செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி வருகை தந்தார்.

அவருடன் மமக மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் ராவுதர்ஷா,தஞ்சை தெற்கு
மாவட்ட செயலாளர் அதிரை ஹாஜா மற்றும் அதிராம்பட்டினம், புதுபட்டினம்
நிர்வாகிகளும் வருகை தந்தனர்.

மதியம் 12 மணியளவில்
மல்லிப்பட்டினம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற ஜமாஅத் ஆலோசனை கூட்டத்தில்
எம்.தமிமுன் அன்சாரி பல்வேறு கருத்துகளை கேட்டறிந்து, அடுத்தகட்ட
நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்…

மேலும் கடற்கரை பகுதி
ஜமாஅத் கிளை ஒருங்கிணைப்பது குறித்தும், சுற்று வட்டாரத்தில் வாழும்
சகோதர சமுதாய மக்களுடன் நல்லுறவை மேம்படுத்துவது குறித்தும்,
காவல்துறையுடனான புரிந்துணர்வு குறித்தும் மமக பொதுசெயலாளர் ஆலோசனைகளை
வழங்கினார்.

இவ்வூரில் வுள்ள அணைத்து இயக்கத்தினரும்,
ஜமாத்தினரின் வழிகாட்டலின் கீழ் கட்டுகோப்பாக செயல்பட வேண்டும் என்றும்,
தான் தோன்றித்தனமாக யாரும் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும்
கேட்டுகொண்டார்.

(2.6.2014) இன்று கலெக்டர்  தலைமையில் நடைபெறும் அமைதி கூட்டத்தில் பேசவேண்டிய கருத்துக்கள் குறித்தும் கூடத்தில் விவாதிகபட்டது.

மமக பொதுசெயலாளர் வருகைக்கு ஜமாத்தினர் நன்றியை தெரிவித்துகொண்டனர்.

நன்றி :

முத்துப்பேட்டை பைசல்

Close