ஹஜ் புனித பயணம் செல்வோர் ஜனவரி 2ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறலாம் 

 ஹஜ் 2017-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிகளிடமிருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. 
சென்னை, எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்திலுள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2017க்கான விண்ணப்பப் படிவங்களை ஜனவரி 2ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை www.hajjcommitte.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  

விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். ஹஜ் 2017 பற்றிய விவரங்களுக்கு ஹஜ் 2017-க்கான வழிமுறைகளைப் படிக்கவும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளத்தை பார்வையிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வரும் ஜனவரி 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

Close