அதிரையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை வழங்கிய அ.தி.மு.க வினர்

 அதிரையில்
இன்று முதல் அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்டது. முதல் நாள்
வகுப்பான இன்று அதிரை 2ம் எண் அரசு பள்ளி, அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி, காதிர்
முகைதீன் பெண்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று அதிரை நகர அ.தி.மு.க வினர் அரசால்
வழங்கப்படும் இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார்கள்.
இதில்
அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, அ.தி.மு.க வின் அதிரை நகர துணை செயலாளர் மற்றும்
கூட்டுறவு வங்கி துணை தலைவர் தமீம், அதிரை 14வது வார்டு செயலாளர் ஹாஜா, 03வது வார்டு
இளைஞர் அணி செயலாளர் குமார், 18வது வார்டு நகர சிறுபாண்மை செயலாளர் அபுதாகிர், மற்றும்
நகர இளைஞர் பாசரை செயலாளார் அகமது தாஹிர் ஆகியோர் உடனிருந்தனர்.

Close