அதிரையில் சிறப்பாக நடந்து முடிந்தது திருக்குர்ஆன் மாநாடு (படங்கள் இணைப்பு)

அதிரை பைத்துல்மால் நடத்திய 14வது திருக்குர்ஆண் மாநாடு ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி அருகில் கடந்த 3 நாட்களாக நடைப்பெற்றது. இதற்க்கு முன்னதாக பல மார்க்க அறிவுப்போட்டிகள் அதிரை பைத்துல்மால் சார்பாக நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இந்த மாநாட்டில் பரிசுகள் வழங்கப்பட்டதுடன் 3 நாட்களில் 8 சிறந்த மார்க்க அறிஞர்களின் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது. 
முதல் நாள்:
ஹாஜி அருட்கவி மு.முஹம்மது தாஹா அவர்களும், மௌலானா எஸ்.எஸ்.ஹைதர் அலி முஸ்பாஹி அவர்களும், மௌலானா எஸ்.பக்ருத்தீன் அவர்களது மார்க்க சொர்பொழிவு நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
இரண்டாவது நாள்:
மௌலானா S.K.M.ஹாஜா மொய்தீன் காஷிமி அவர்களும், மௌலானா N.A.ஷவ்கத் அலி உஸ்மானி அவர்களும், மௌலானா அஃப்ஷல் உலமா எம்.அபுதாஹிர் பாஜில் பாகவி தேவ்பந்தி அவர்களது மார்க்க சொர்பொழிவு நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
மூன்றாவது நாள்:
மௌலானா சம்சுதீன் காசிமி அவர்களும், மௌலானாசதீதுத்தீன் பாஜில் பாகவி அவர்களும் சொற்பொழிவாற்றினார்கள்.
3 நாட்களும் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் அனைவரும் இரவு பகல் பாராது உழைத்து வேலைகளில் பம்பரம் போல் சுழன்று மிகவும் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளனர்.அ
இதில் சிறுவர்களின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை காண்பதற்க்காகவும் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவை செவியுறுவதற்க்காகவும் ஏராளமான அதிரையை சேர்ந்த ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்கள் 3 நாட்கள் முழுவதும் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு இந்நிகழ்விற்க்கு ஆதரவு நல்கினர்.

Close