அதிரையில் சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் நடத்திய கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

அதிரையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான “அடுத்தது என்ன?” என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்று 28-12-2016 அன்று காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஆலிம் முஹம்மது சாலிஹ் கல்லூரியின் பேராசிரியரும், மாணவர்கள் நல ஆர்வலருமான பேரா.முஹம்மது ரபீக், மொழிப்பிரியன் அப்துல் ஹமீது, குழந்தை பேச்சாளர்.மஹ்மூத் அக்ரம், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்.செய்யது அகமது கபீர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள கருத்துக்களை எடுத்துரைத்தனர்

இதில் அடுத்தது என்ன படிக்கலாம்? கல்வி உதவி தொகைகள் பெறுவது எப்படி? நுழைவுத்தேர்வு என்ன? என்பது போன்ற மாணவர்களின் பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பல பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். 

Close