அமேசானில் நீங்களும் பொருட்களை விற்கலாம்!

இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம், “Sell as Individual” என்ற புதிய சேவையை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம், பயன்படுத்திய பொருட்களை ஆன்லைனில் விற்க முடியும். இந்த சேவையைப் பெற, விற்கப்படும் பொருட்கள் மற்றும் விற்பவர் பற்றிய விவரங்களை அமேசான் இணையதளத்தில் பதிவேற்றிவிட வேண்டும். பொருட்கள் விற்கும் பட்சத்தில், அதற்கு ஒரு சிறிய கமிஷனை மட்டும் அமேசான் நிறுவனம் எடுத்துக் கொள்ளுமாம்.

தற்போது பெங்களூரில் மட்டும் இந்த சேவை அளிக்கத் தொடங்கியுள்ளது அமேசான் நிறுவனம். விரைவில், முக்கிய நகரங்களுக்கு இச்சேவை விரிவுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Close