ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு பயணிகள் பட்டியல்(சார்ட்) தயாரிக்கப்படும். முக்கிய வழித்தடங்களில் காத்திருப்போர் பட்டியலிலேயே நூற்றுக்கணக்கில் இருப்பார்கள். மற்ற வழித்தடங்களில் முன்பதிவு இடங்களே காலியாக கிடக்கும். அப்படி காலியாக இருக்கும் இருக்கைகளுக்கு டிக்கெட் எடுப்பவர்களுக்கு 10 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இது ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது ஏற்கனவே ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ஆகிய ரயில்களில் நடைமுறையில் உள்ளது.

தற்போது சோதனை முயற்சியாக அடுத்த 6 மாதங்களுக்கு அனைத்து ரயில்களிலும் இதை கொண்டு வர முடிவு செய்யப்பட்டள்ளது.

அதே போல் டிக்கெட் பரிசோதகரிடம் கடைசி நேரத்தில் பெறப்படும் டிக்கெட்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முன்பதிவு கட்டணம், சேவை கட்டணம், ரயிலுக்கான சிறப்பு கட்டணம் போன்றவை வழக்கமான கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Close