மீண்டும் மழைக்கு வாய்ப்பு!

இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். தமிழகத்தை பொறுத்தமட்டில் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.வட தமிழக கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்த அளவு 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும். வடகாற்று தெற்கு நோக்கி வீசுவதால் பனிபொழிவு அதிகமாகவே காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Close