அதிரையர்களே எச்சரிக்கை! தண்ணீருக்காக கண்ணீர்விடும் நிலை வரலாம்!

அதிராம்பட்டினம், தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் இதுவும் ஒன்று. வயல்களும், தோப்புத்துரவுகளும் நிரம்பி பசுமையுடன் குளிர்ச்சியான கடல் காற்றுடன் அமைந்திருக்கும் எழில் கொஞ்சும் ஒரு நகரம்.தொழில் வளர்ச்சியிலும், கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் என்னும் பல துறைகளிலும் சிறந்து விளங்கும் ஊறாக இது இருந்தாலும் கூட அரசாங்கத்தால் மட்டும் தொடர்ந்து நலத்திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
உண்மை தான், முன்பொரு காலத்தில் நீர் வளமும், நில வளமும் நிறைந்த இந்த ஊர் தற்பொழுது ஒரு சிலரின் சுயநலத்துக்காகவும் சுய லாபத்திற்க்காகவும் நீர் வளமற்று காணப்படுகிறது. சில மாதங்கள் முன்பு வரையிலும் அதிராம்பட்டினம் மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் என்றால் என்ன என்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஆனால் தற்போதைய நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. இந்த ஆண்டு இரண்டு பருவ மழையும் அதிரையில் பொய்த்து விட்ட காரணத்தால், இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக தேவைக்கு அதிகமாக தண்ணீரை பயன்படுத்தாமல் சிக்கனமாக செலவிட்டுங்கள்.
ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி
Close