வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு ஆறுதலான செய்தி!

வெளிநாடு சென்ற இந்தியர்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: கடந்த நவம்பர் 9 முதல் டிசம்பர் 30 வரை வெளிநாடு சென்றிருந்த இந்தியர்கள், தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை 2017 மார்ச் 31ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம். இதே காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை ஜூன் 30 வரை மாற்றிக்கொள்ளலாம். இந்த சலுகை பெமா விதிமுறைப்படி வழங்கப்படுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Close