பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசு!

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் 29 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.68.41 காசுகளுக்கு விற்பனையாகும் நிலையில், இனி ரூ.69. 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும். இதில் மாநில வரிகள் அடங்காது. கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதிபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.21 காசுகள் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டீசல் விலை லிட்டருக்கு 97 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.58.28 காசுகள் விற்பனையாகும் நிலையில் இனி ரூ. 59.25 காசுகளுக்கு விற்பனையாகும். கடந்த டிசம்பர் 16-ந்தேதி டீசல் விலை ரூ.1.79 காசுகள் உயர்த்தப்பட்டது.

மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 2 ரூபாய் உயர்ந்து ரூ.434.71 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில் இது 8வது விலை உயர்வு. மேலும் விமான எரிபொருளின் விலை 8.6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.4,161 உயர்ந்துள்ளது.

Close