அதிரை ரேசன்கடைகளில் அலைமோதும் மக்கள்! தொடங்கிய உள்தாள் ஒட்டும் பணி! (படங்களுடன்…)

தமிழகத்தில், ஒரு கோடியே 91 லட்சத்து 53 ஆயிரத்து 352 அரிசி விருப்ப அட்டைகள் உட்பட 2 கோடியே 3 லட்சத்து 386 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. தற்போதுள்ள குடும்ப அட்டைகள் கடந்த 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டவை. கடந்த 2009-ம் ஆண்டே காலாவதியான நிலையில் தொடர்ந்து ஆண்டுதோறும் உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது.

பழைய குடும்ப அட்டைக்கு பதில் மின்னணு குடும்ப அட்டை(ஸ்மார்ட் கார்டு) வழங்குவதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டை எளிதாக்க விற்பனை முனைய இயந்திரம் கடைகளுக்கு வழங்கப் பட்டுள்ளன. இதில், தற்போது குடும்ப அட்டை விவரங்கள், ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடியாத காரணத்தால், ஸ்மார்ட் கார்டு வழங்குவது தள்ளி வைக்கப்பட்டுள் ளது. அதற்கு 6 மாதங்கள் வரை ஆகலாம் என்பதால் தற்போது தமிழகம் முழுவதும் உள்தாள் ஒட்டப்படுகிறது. அதிரையிலும் அனைத்து ரேசன் கடைகளிலும் இந்த பணி தொடங்கியுள்ளது.

Close