அதிரையிலிருந்து இந்த ஆண்டு ஹஜ் செல்ல விண்ணப்பிப்பவர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும்!
கடந்த (02-01-2017) முதல் 2017ம் ஆண்டு ஹஜ் செய்பவர்களுக்கான விண்ணப்பப்படிவம் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. வரும் ஜனவரி 24ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பவேண்டும் அல்லது ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சென்னை அல்லாத தொலைதூரத்தில் வசிப்பவர்கள் ஹஜ்ஜூக்காக விண்ணப்பிக்கும் போது அறியாமல் சில தவறுகள் செய்துவிடுவதால் நிறைய விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிடுவதாக தெரிகின்றது. குறிப்பாக அவர்கள் பூர்த்தி செய்வதில் ஏற்படும் தவறுகள், மஹ்ரம் பிரச்சினை, போஸ்ட் மூலம் அனுப்புவதால் காலதாமதமாக வந்து சேர்தல் போன்ற பிரச்சினைகள் முக்கிய பிரச்சினையாக கருதப்படுகின்றது. எனவே அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிரமமின்றி ஹஜ் பயனத்திற்கு விண்ணப்பிக்கும் வகையில் நமது Adirampattinam Development and Welfare Association, (ADWA) Chennai, சார்பாக நமதூர் அதிரையில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், நமதூர் பகுதிகளில் இந்த ஆண்டுக்கான ஹஜ் பயனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிரை (HWC) ‘மானுட நல மையத்தில்’ வரும் 2017 ஜனவரி 5ம் தேதி வியாழக்கிழமை முதல் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு, அங்கிருக்கும் நமது பிரதிநிதிகளிடம் பூர்த்திசெய்வதற்கான உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம். (ஹஜ் பயன விண்ணப்பத்திற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.300 + DD கட்டணம் மட்டும் வழங்கி மற்ற சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்) முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் உடனடியாக விண்ணப்பிக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

எனவே வரும் ஆண்டிற்கான ஹஜ் பயனத்திற்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு

Adiraimpattinam Development and Welfare Association, Chennai

தெடார்புக்கு: 9600074747 / 9600473993

அதிரையில் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

மானுட நல மையம் (HWC)

அல் அமீன் பள்ளி வளாகம்,

பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு,

அதிராம்பட்டினம்

தொடர்புக்கு:

அப்துல் ரஷீத் – 89391 98278

ஹாரிஸ் – 99527 78890

கமாலுதீன் – 99521 30909

Close