அதிரையர்களே! உங்களுக்கு இந்த எச்சரிக்கை!

அதிரையில் 2016ஆம் ஆண்டு பெய்த மொத்த மழையின் அளவு 61 செ.மி. இது அதிரையின் சராசரி மழை(124 செ.மி)யை விட மிகவும் குறைவு. (Refer – Below screenshot image – Data collected from Regional Meteorological Centre, Chennai). சொல்ல போனால் பாதி அளவு கூட மழை பெய்யவில்லை. டிசம்பர் மாதத்துடன் மழை காலம் முடிகிறது. பின் வரும் மாதங்களும் (ஜனவரி முதல் மே வரை) தென்னிந்தியாவில் வறண்ட காலமாக (மழை அதிகம் பெய்யாத காலமாக உள்ளது). இதனால் அதிரையில் நிலத்தடி நீர் மிகவும் குறையும் அபாயம் உள்ளது.

போதுமான மழை பெய்யாத காரணம் ஒரு பக்கம் இருந்தாலும், காலத்தில் கட்டாயத்தால் பெருகி வரும் கட்டிடங்களும், மறைந்து வரும் மண் சாலைகளும், தரையாக மாறிவரும் வீட்டின் கொல்லை புறங்களும் மழை நீரை பூமியில் உறிஞ்சாமல் சாக்கடையில் தள்ளி விடுகிறது. இதனால் குறைந்த அளவு பெய்த மழையிலும் சொற்ப அளவு தண்ணீர் தான் நிலத்தில் சேருகிறது.

தற்போது, பெரும்பாலான வீடுகளில் ஆழ்துளை கிணறு (Bore Well) கொண்டு தான் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறோம். நிலத்தடி நீர் தான் அனைவருக்கும் நீர் ஆதாரமாக விளங்குகிறது. அதுவும் குறைந்து விட்டால் அதிரையில் வரும் கோடை காலங்களில் அன்றாட தண்ணீர் தேவைக்கு மிகவும் சிரமப்படும் அளவுக்கு மோசமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதனால் தண்ணீரை வீண் விரயம் செய்யாமல் சிக்கனமாக பயன் படுத்துவோம்.

முடிந்த வரை அனைத்து அதிரை வாசிகளுக்கு இந்த செய்தியை சேர்ப்போம். தேவைப்பட்டால், இந்த தகவலை print out எடுத்து தங்கள் வீட்டினுள் உள்ள அனைத்து Water Tape அருகிலும் ஒட்டி வைத்து கொள்ளுங்கள்.

ஆக்கம்: அப்துல் காதர்

Close