5 முறைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் ?

​அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஜனவரி 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு ஏடிஎம்களில் இருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம் என்றும் அறிவித்திருந்தது. அதே நேரத்தில் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இதனையடுத்து, பொதுமக்கள் தாங்கள் கணக்கு வைத்திராத வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்தும் பணம் எடுத்தனர். மேலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான முறையும் பணம் எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மீண்டும் கட்டண முறையை அமல் படுத்த திட்டமிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.

Close