பத்திரப்பதிவுக்கு தடை நீட்டிப்பு!

சென்னை உயர்நீதி மன்றம் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்ய 30-ம் தேதி வரை தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்கக் கோரிய மனு மீதான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இது தொடர்பாக பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, வரும் 30-ம் தேதி வரை பத்திரப்பதிவு தடையை நீட்டித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.பத்திரப்பதிவு தடை நீக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலைச் சார்ந்தவர்கள் மத்தியில் நிலவிய நிலையில், தற்போது தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Close