தமிழ்நாடு இந்தியாவில் தான் உள்ளதா?

நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாள் இதுவரை மத்திய அரசின் கட்டாய விடுப்பு பட்டியலில் இருந்து வந்தது. ஆனால் இதை மாற்றி பொங்கல் திருநாளை கட்டாய விடுப்பிலிருந்து மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளைக் கொண்டாடுபவர்கள் மட்டும் அந்த நாளில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் திருநாள் கொண்டாட்டத்துடன் இணைத்து நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நன்றி: புதிய தலைமுறை

காவேரி மேலாண்மை வாரியம், ஜல்லிக்கட்டு என பல வகைகளில் தமிழர்களை மத்திய அரசு வதைத்து வரும் நிலையில், தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்களுக்கான விடுமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழ்நாடு இந்தியாவில் தான் உள்ளதா? என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.

Close