மஸ்கட்டில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் பாம்பு – விமான சேவை நிறுத்தம்!

நேற்று மஸ்கட்டிலிருந்து துபை புறப்படவிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் கார்கோ ஏற்றும் பகுதியில் பாம்பு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

எனினும், கார்கோ பகுதியில் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டபோது விமானத்தில் பயணிகள் யாரும் ஏற்றப்பட்டிருக்கவில்லை. பாம்பு விமானத்திலிருந்து அகற்றப்பட்டப்பின் இன்று திங்கள் முதல் விமானம் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

எமிரேட்ஸ் விமானத்தில் நேற்று பாம்பு புகுந்த சம்பவத்தை, 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்நேகஸ் ஆன் எ பிளேன்’ என்ற ஆங்கிலப் படத்துடன் ஒப்பிட்டு, அப்படத்தின் கதாநாயகன் சாமுவேல் எல் ஜான்சன் இல்லாத நிலையில் பாம்பு மட்டும் விமானத்தில் இருந்ததாக சமூக வலைத்தளவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் டொர்ரியான் நகரிலிருந்து மெக்ஸிகன் சிட்டிக்குப் பறந்த மெக்ஸிகன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சுமார் 1 மீட்டர் நீள பாம்பு ஒன்று கண்டுபிடித்து குறிப்பிடத்தக்கது.

Close