அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சட்ட விழிப்புணர்வு முகாம்!

நமது சமுதாயத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து சட்ட ரீதியான துண்புறுத்தலுக்கும், சட்ட ரீதியான வன்முறைகளுக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் இதன் தாக்கம் பிரதிபலித்துக் கொண்டு இருக்கின்றதை நாம் ஊடகங்களில் காணமுடிகின்றது. இதன் காரணமாக, அடிப்படை உரிமைகளை கூட கேட்டுப்பெருவது எப்படி என்பது குறித்து மக்களுக்கு சட்ட ரீதியான அறிவு துளியும் இல்லாமல் உள்ளது.

இந்த நிலையில் நமது மக்களுக்கு அடிப்படை சட்டங்களை பயிற்றுவிக்கும் நோக்கத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அதிரை ஆய்ஷா மகளிர் அரங்கில் வரும் 18-01-2017 மாலை 4 மணியளவில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. இதில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு அடிப்படை சட்டங்கள் குறித்த விளக்கத்தை வழங்க உள்ளார்கள். இதில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close