அதிரை இணையதள கூட்டமைப்பு தொடக்கம்! (AWO)

அதிரை இணையதள நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை அதிரை நியூஸ்  நிர்வாகி அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது. 
இதில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் Z.முகம்மது சாலிஹ், அதிரை பிறை சார்பில் M.R.முகம்மது சாலிஹ், இர்ஷாத், அதிரை நியூஸ் சார்பில் அஜீம், ராஜேஸ், அதிரை செய்தி சார்பில் முகம்மது ஆகியோர் கலந்துக்கொண்டனர். 
இக்கூட்டத்தில் அதிரையில் உள்ள முக்கிய விவகாரங்கள் பிரச்சனைகள் அதனை எவ்வாறு கையாளுவது முதலிய பல விவாதங்கள் நடைப்பெற்றது.
தொடர்ச்சியாக பேசிய அதிரை ராஜேஸ் அவர்கள் “அதிரைக்கு என பல இணையதளங்கள் உள்ளன ஆனால் அவைகள் சிதறி கிடைக்கின்றன அவைகளை ஒன்று இணைத்து நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல் பட வேண்டும்” என்றார்.

மேலும் அதிரை பிறை நிருபர் M.R. முகம்மதுசாலிஹ் அவர்கள் கூறுகையில் “நாம் ஒன்றுப்பட்டு செயலாற்ற வேண்டும். ஊரின் ஒற்றுமை மற்றும் பொதுமக்களின் நலன்களை காக்குவதே நமது குறிக்கோள்” என்றார்.
இதனை அடுத்து பேசிய அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் Z.முகம்மது சாலிஹ் அவர்கள் ” நமது நோக்கம் யாவும் ஒன்றே எனவே நாம் ஒன்றுப்பட்டு செயலாற்றுவது தான் சிறந்தமுறை ஆகும். எந்த நேரத்திலும் நாம் ஒற்றுமை என்னும் கைற்றை விட்டு விடக்கூடாது. நாம் தற்பொழுது ஊடகம் என்னும் முக்கிய பொறுப்பில் உள்ளோம் ஊரில் யார் பொதுமக்களுக்கு சேவைகள் செய்யாமல் தங்களது அரசு பொறுப்பை தவறாக பயன்படுத்துகின்றனரோ அவர்களில் போலி முகத்திரையை நாம் கிழிக்க வேண்டும் எதிர்வரும் தேர்தலில் மக்கள் அவர்களின் உண்மை முகம் அறிந்து வாக்களிக்க நாம் ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும்” என்றார்.
கடைசியாக அதிரைக்கு என தனி இணையதள கூட்டமைப்பு Adirai Web Organization (AWO) உருவாக்கி செயல்படுவது என தீர்மானம் ஏற்றப்பட்டது.
இக்கூட்டமைப்பில் இணைந்துள்ள இணையதளங்கள் விபரம்:
இப்படிக்கு

Close