Adirai pirai
தமிழகம்

தரமற்ற உணவகங்களுக்கு ரூ.45,000 அபராதம் – தஞ்சை மாவட்ட ஆட்சியர் அதிரடி

தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்த 4 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி தரக்குறைவான உணவுப் பொருள்களைத் தயாரித்தாலோ, விநியோகம் செய்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ தரக்குறைவு பொருள்களுக்கு அபராதமாக ரூ. 5 லட்சம் வரையிலும், தப்புக் குறியீடு உள்ள பொருள்களுக்கு ரூ. 3 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கலாம்.
இதன்படி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 4 வணிக நிறுவனங்களில் பொதுமக்களுக்குத் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது உணவு பாதுகாப்பு அலுவலர்களால் கண்டறியப்பட்டது.


உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலரும், கூடுதல் மாவட்ட குற்றவியல் நடுவரும், தீர்ப்பு அலுவலருமான பெ. சந்திரசேகரன் விசாரணை மேற்கொண்டு, குற்றச் செயலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு ரூ. 45,000 அபராதம் விதித்தார். எனவே, தரமற்ற உணவுப் பொருள்களைத் தயாரித்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் போன்ற குற்ற நிகழ்வுகளில் ஈடுபடும் விற்பனை நிலையங்களின் பேரில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும், தரமான உணவுப் பொருள்களை மட்டும் வாங்கிப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy