அதிரையில் சிறப்பாக நடந்து முடிந்த “இளம் இஸ்லாமியன்” மார்க்க அறிவுப் போட்டி (படங்கள் இணைப்பு)

அதிரையில் இளைஞர்களால் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் இளம் இஸ்லாமியன் என்ற மார்க்க அறிவுப் போட்டி இன்று அதிரை ஏ.எல்.பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இதில் முன்பதிவு செய்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வினை எழுதினார்கள். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை போட்டியை நடத்தும் இளைஞர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி வரும் 16-01-2017 (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் அதிரை செக்கடி குளம் அருகில் மிகச்சிறப்பான முறையில் நடத்தப்படவுள்லது. இதில் தமிழக அளவில் தலைசிறந்த உலமா பெருமக்களின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. இதில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close