முதுகுவலி -backache

                            முதுகுவலி -backache

DESCRIPTION:
                One of the most common ailments faced by people in the present times,backache causes intense pain in the upper,Middle or Lower back region.The pain can either root from the bones and ligaments that form the spine,the muscles and tedons that support the back,the nerves that exist in the spinal column or even the internal organs.Mostly affecting the lower back,backpain occurs in both men and women.there are several reasons for the backache to strike.
முதுகெலும்புத்தொடர்.-(Spinal Column)
முதுகெலும்புத் தொடர் 33 தனித்தனி எலும்புகளால் ஆன கோர்வை ஆகும்.நமது உடலின் மையப் பகுதியில் அமைந்து நமது உடற்தோற்றதைக்(Posture)கட்டுப்படுத்துகின்றது.மேலும் உடலுக்கு உறுதித் தன்மையும் (mobility))தருகின்றது.மேலும் 33 எலும்புகளில் 24 எலும்புகள் அசையக்கூடிய வகையிலும் 9 எலும்புகள் அசையாத வகையிலும் அமைந்துள்ளன.
                                                முதுகெலும்புகள்-(Vertebrae)
                                        
முதுகெலும்புகள் அதன்  செயலுக்குத் தகுந்தாற்போல் சிக்கலான அமைப்பை உடையன.மூளையின் தொடர்ச்சியாக நீளும் தண்டுவடமானது முதுகெலும்பிற்கு நடுவே உள்ள துவாரம் வழியே உடலின் மையப்பகுதி வரை செல்கின்றது.அதன் தொடர்ச்சியாகத் தண்டுவட நரம்புகள் இடுப்புவரை செல்கின்றன.மேலும் ஒவ்வொரு முதுகெலும்பிற்கும் இடையே உள்ள இடைவெளியில் வலது மற்றும் இடது பாகங்களாகத் தண்டுவட நரம்புகள் தான் நமது உணர்ச்சியை மூலைக்குச் செய்தியாக எடுதுச்சென்று,பின் மூளையின் உத்தரவுகளை உடல் உறுப்புகளுக்கு எடுத்து வந்து செயல்படுகின்றன.
                                                         கழுத்துப்பகுதி(Cervical Spine)

கழுத்துப்பகுதியில் மொத்தம் 7 எலும்புகல் உள்ளன.மற்றப் பகுதிகளில் உள்ள முதுகெலும்பைக்காட்டிலும் எளிதில் இயங்கக்கூடிய வகையில் இவை அமைந்துள்ளன.
                                                         மார்புப் பகுதி:(Thoraxic Spine)

மார்புப் பகுதியில் மொத்தம் 12 எலும்புகள் உள்ளன.இப்பகுதியில் உள்ள முதுகெலும்புகள் மார்புக் கூட்டு எலும்புகளுடன் இணைந்து உடலின் முக்கிய உள் உறுப்புகளான இதயம்,நுரையீரல் போன்றவற்றைப் பாதுகாக்கின்றன.இப்பகுதி எலும்புகள் அதிகம் அசையக்கூடியதாக இல்லை.
இடுப்புப் பகுதி:(Lumbar Spine)
                   
இடுப்புப் பகுதியில் மொத்தம் 5 அசையக் கூடிய முதுகெலும்புகள் உள்ளன.மற்ற முதுகெலும்புகளைக்காட்டிலும் இவை சற்று அளவில் பெரியதாக உள்ளன.இப்பகுதி எலும்புகள் நமது எடையை தாங்கக்கூடியதாகவும்,உடலுக்கு ஏற்படும் அழுத்தத்தைத் தாங்குவதிலும்,இயகத்திலும் முக்கியப் பங்காற்றுகின்றன.எனவே தான் இப்பகுதி எலும்புகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன.
                                                     திருகெலும்பு (Sacrum)

இப்பகுதியில் உள்ள 5 எலும்புகளும் அசையக்கூடியதாக இல்லாமல் ஒன்றோடொன்று இணைந்து ஒரே அமைப்பாகக் காணப்படுகிறன.மேலும் இவ்வெலும்புகள் இடுப்பெலும்பு வ ளையத்தோடு (Pelvis) இணைந்து அசையக்கூடியதாக இருப்பதால் இடுப்பெலும்பு வளையத்தின் இயக்கம் இடுப்புப் பகுதியில் உள்ள எலும்புகளின் வடிவத்தைப் பாதிக்கிறது.
வால் எலும்புகள்-(Coccyx)
நான்கு எலும்புகளை உடைய வால் எலும்புகள் அசையக்கூடியதாக இல்லாதவை.இது மனித உடலின் பயனற்ற உறுப்பாகும்.
இடைத்தட்டு அல்லது டிஸ்க்
நமது முதுகெலும்புத் தொடரில் மொத்தம் உள்ள 33 எலும்புகளில் 24 எலும்புகள் அசையக்கூடியவை.இவ்வெலும்புகள் இணைப்புத்தசைகளைக் கொண்டு பிணைக்கப்பட்டுள்ளன.அதே சமயம் ஒவ்வொரு எலும்பும் இடைத்தட்டு அல்லது டிஸ்க்கைக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது.இந்த இடைத்தட்டுகள் அல்லது டிஸ்க்குகள் பகுதிக்கு தகுந்தாற்போல் அளவில் மாறுபடும்.கழுத்துப்பகுதியில் அவ்வெலும்புக்குத் தகுந்தாற்போல் சிரியதாகவும்,இடுப்புப் பகுதுயில் அவ்வெலும்புக்கு தகுந்தாற்போல் பெரியதாகவும் காணப்படுகிறது.
நாம் அன்றாடம் செய்யும் ப ல செயல்களில் எல்லாத் தசைகளையும்,மூட்டுக்களையும் பயன்படுத்தாமல் குறிப்பிட்ட சில மூட்டுகளையும்,தசைகளையும் பயன்படுத்துவதாலேயே தசைகளின் பலம் குன்றுதல் மற்றும் மூட்டுத் தேய்மானம் போன்றவை ஏற்படுகின்றன.
மேலும் இந்த அவசரகால உலகத்தில் விளையாடுதல்,சைக்கிள் ஓட்டுதல்,நடத்தல்,ஓடுதல்,ஆற்று நீரில் நீந்துதல் போன்ற பல்வேறு செயல்களை நம்மில் பலரும் மறந்தும் போய்விட்டோம்.
மேலும் சொல்லப்போனால் இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்கள் வழக்கில் இருக்குமா என்று கூட எண்ணத் தோண்றுகிறது.இப்படிபட்டச் சூழலில் நாம் நம் உடலினைக் காக்கவும் உறுதி செய்யும் நோயிலிருந்து விடுபடவும் நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.  
Close