ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் மல்லுக்கட்டும் அதிரை இளைஞர்கள் (படங்கள் இணைப்பு)

அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்ததை கண்டித்தும்,ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகினர். அவர்களுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. முதல்வர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் அவர், தை முடிவதற்குள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது எழுந்த எழுச்சியை போல் தற்போது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழக இளைஞர்களால் எழுச்சியுடன் நடத்தப்பட்டு வரும் இந்த போராட்டத்தில் அதிரையை சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் முதன்மை பங்களிப்பை இந்த போராட்டத்திற்கு வழங்கி வருகின்றனர்.

Close