அதிரை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு! (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை அடுத்த புனல்வாசல் கிராமத்தில் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரியத்தை பறையாற்றும் வகையில் கடந்த 75 ஆண்டுகளாக கொண்டாடப்படும், இப்பொங்கல் திருவிழா, இந்தாண்டும் வழக்கம்போல் நடைபெறும் என அறிக்கப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தடைவிதித்ததை அடுத்த, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், புனல்வாசல் கிராமத்தில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்று கேள்வி எழுந்த நிலையில், எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியான முறையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சீறி வந்த 60க்கும் மேற்பட்ட காளைகளை, வீரர்கள் அடக்க முயன்றனர்.

Close