அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்!

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்
தேதி: 13/01/2017
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 42 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/01/2017 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. முஹம்மது ஹஸன் ( உறுப்பினர் )

முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
சிறப்புரை : A. அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )

நன்றியுரை​​ : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

தீர்மானங்கள்:
1) அல்லாஹ்வின் கிருபையால் 42 வது கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நமதூர் பழைய புதிய உறுப்பினர்கள் அனைவரும் கலந்து பல ஆலோசனைகளை பரிமாறிக்கொண்டார்கள். ABM-ன் 23 ஆண்டுகால சேவையையும் கடந்த ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டு ஒருமனதாக செயல்பாடுகளின் விளக்கங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.
2) அல்ஹம்துலில்லாஹ் தலைமையகத்தின் புதிய ஒரு முயற்சியின் காரணமாக ஜனாஸாவிற்கான மரங்கள் விஷயத்தில் ஈடுபட்டு குறைந்தது 20 ஜனாஸாவுக்குத் தேவையான மரங்களை ABM தலைமையகத்திலேயே வைத்து ஊரின் நன்மையையும் ஏழை எளிய மக்களின் நலம் கருதி பாதி விலையில் ரூ 860/- விற்பனை செய்து வருவதை நமதூர் மக்கள் முழு பயன் அடையுமாறும் இம்முயற்சி முழு வெற்றிகரமாக செயல்பட வேண்டுமாய் துஆ செய்யப்பட்டது.

3) கடந்த மாதம் ACCIDENT ஆன சகோதரர் ஷாபி அவர்களுக்கு மருத்துவ உதவி செய்த ( ரூ 32000 ) ரியாத் அதிரைவாசிகள் அனைவரும் நன்றித் தெரிவிக்கப்பட்டு இது போன்று ஊர் ஒற்றுமைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) ரெகவரிங் டெபாசிட் விஷயமாகவும், பென்ஷன் விஷயமாகவும் நினைவூட்டப்பட்டு தொடர் முயற்சியில் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது

5) செம்மையாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வரும் ABM தலைமையகத்திற்கு மேலும் ஊரிலுள்ள அனைத்து மீடியாக்களும் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுத்து மேலும் மேலும் திறம்பட செயல்படுவதற்கு ஆதரவு தந்து நல்குமாறு கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் FEBRUARY 2017 10-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

​​​… ஜஸாகல்லாஹ் ஹைர்…

Close