மதுக்கூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனிதசங்கிலி போராட்டம் (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், அலங்காநல்லூரில் தடியடி நடத்தி கைது செய்யப்பட்ட 250க்கு மேற்பட்டோரை விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதற்கு ஆதரவு தெரிவித்து புதுவை மாநிலத்திலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 2 நாட்களாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள், வாலிபர்கள், கல்லூரி மாணவர்கள் திரண்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல், மதுக்கூரில் இன்று ஐனவரி 18
ஐல்லிக்கட்டுக்கான தடையை அகற்ற கோரியும்,பீட்டாவை அமைப்பை தடை செய்யக்கோரியும் மதுக்கூரில் இன்று மாலை 5 மணிக்கு முக்கூட்டுச்சாலையிலிருந்து அறவழியில் மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது.

பள்ளி கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இவர்களுடன் சேர்ந்த சமூக ஆர்வலர்களும்,பெரியவர்கள்,சிறியவர்கள்,அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனார் . . .

இப்படிக்கு
ஐல்லிகட்டு மீட்பு குழு
மதுக்கூர்.

Close